சமூக உதவி பெரும் கருவியாக ஆதார் அட்டையை மாற்றும் திட்டம் துவங்கியது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 அக்டோபர், 2012 - 17:17 ஜிஎம்டி
சோனியா காந்தியுடன் மன்மோகன் சிங்

சோனியா காந்தியுடன் மன்மோகன் சிங்

அரசின் பல்வேறு சமூகத் திட்டங்களுக்கான பயன்களைப் பெறும் ஒரு கருவியாக பல்முனை பயனளிப்பு அட்டையாகக் கருதப்படும் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் சனிக்கிழமை துவக்கி வைத்தார்கள்.

"உதவித் திட்டங்கள் பெற ஆதார் அட்டை அவசியம் என்றானால் பலர் பாதிக்கப்படுவர்"

இந்திய மாதர் சம்மேளனப் பொதுச் செயலர் ஆனி ராஜா

"ஆதார் அட்டை அவசியம் என்றானால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்"

இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலை வருமானால் பலர் பாதிக்கப்படுவார்கள் என இந்திய மாதர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆனி ராஜா தெரிவிக்கிறார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதேநேரத்தில், நாடு முழுதும் 51 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டைத் திட்டம் துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை 24 கோடி மக்கள் அதற்காகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டில் 60 கோடி மக்களுக்கு அந்த அட்டையை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு சமூகத் திட்டங்களை இத்துடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

"ஆதார் அட்டையால் உதவித் திட்டங்களின் பயன் அதிகரிக்கும்"

அமைச்சர் நாராயணசாமி

"அரசு உதவித் திட்டங்களின் பயன் பெருக ஆதார் அட்டை உதவும்"

அரசு உதவித் திட்டங்களின் பயன் பெருக ஆதார் அட்டை உதவும் என்று வாதிடுகிறார் மத்திய இணை அமைச்சர் வி நாராயணசாமி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பல்வேறு சமூகத் திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர ஆதார் அட்டை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அரசு வழங்கும் பல்வேறு மானியங்கள், உரிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஆதார் அட்டை பேருதவியாக இருக்கும் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அரசின் திட்டங்களால் பலன் பெறுவதற்கும் ஆதார் உதவிகரமாக இருக்கும் என நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.