கிங்ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமம் இடைவிலக்கல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 அக்டோபர், 2012 - 10:56 ஜிஎம்டி
கிங்ஃபிஷர் விமானங்களில் ஒக்டோபர் துவக்கத்திலிருந்து இயங்கவில்லை

கிங்ஃபிஷர் விமானங்களில் ஒக்டோபர் துவக்கத்திலிருந்து இயங்கவில்லை.

இந்தியாவில் கிங்ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கான உரிமத்தை இந்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு இடைநிறுத்தியுள்ளது.

தங்களுடைய நிதிச் சிக்கல்களை தீர்க்கக்கூடிய திட்டம் ஒன்றை உருவாக்க இந்த நிறுவனம் தவறிய காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பார்த்த வேலைக்கான ஊதியம் கிடைக்கவில்லை என இந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய கிங்ஃபிஷர் விமான சேவை ஒக்டோபர் மாத ஆரம்பம் முதல் இயங்காமல் நின்றுபோயுள்ளது.

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான விஜய் மல்லையாவினால் 2005ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த விமான நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே எவ்விதமான இலாபத்தையும் ஈட்டியிருக்கவில்லை.

இந்த நிறுவனத்துக்கு 250 கோடி டாலர்கள் கடன் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.