மோடியுடன் மறுபடியும் உறவு: சந்தித்தார் பிரிட்டிஷ் தூதர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 அக்டோபர், 2012 - 12:14 ஜிஎம்டி

இந்தியாவின் சர்ச்சைக்குரிய தலைவர் நரேந்திர மோடியுடன் உறவு வைத்துக்கொள்வதை கடந்த பத்து ஆண்டுகாலமாக தவிர்த்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் ஜேம்ஸ் பெவன் குஜராத் சென்று முதல்வர் மோடியைச் சந்தித்துள்ளார்.

சுமார் ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் மதக் கலவரங்களில், வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் மோடி மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவரைப் புறக்கணித்து வந்தன.

குஜராத் மதக் கலவரம் தொடர்பான விசாரணைகளில் மோடி குற்றமற்றவர் என்று முடிவுகள் வந்த நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இந்த மாற்றம் தற்போது வந்துள்ளது.

தவிர குஜராத் மாநிலத்தை தொழில் ஊக்கம் கிடைக்கக்கூடிய ஒரு இடமாக முதலீடுகளை வரவேற்கும் ஒரு இடமாக மாற்றியவர் மோடி என்று கருதப்படுகிறது.

நரேந்திர மோடியுடன் பிரிட்டிஷ் தூதர்

நரேந்திர மோடியுடன் பிரிட்டிஷ் தூதர்

பாஜக ஆட்சி வரும்போது நாட்டின் பிரதமராக மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், பிரிட்டன் அவருடன் மீண்டும் உறவு வைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.