பஞ்சாபி நகைச்சுவைக் கலைஞர் ஜஸ்பால் பட்டி விபத்தில் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 அக்டோபர், 2012 - 10:25 ஜிஎம்டி
ஜஸ்பால் பட்டி

ஜஸ்பால் பட்டி

இந்தியாவின் மிகப் பிரபலமான நகைச்சுவைக் கலைஞர்களில் ஒருவரான ஜஸ்பால் பட்டி பஞ்சாபின் ஜலந்தர் மாநிலத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 57.

பவர் கட் என்ற தனது புதிய படம் பற்றிய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வியாழனன்று மோகா நகரிலிருந்து ஜலந்தர் சென்ற பட்டியின் கார் மரமொன்றில் மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.

1980களிலும் 90களிலும் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஜஸ்பால் பட்டி. ஃப்ளாப் ஷோ, உல்டா புல்டா போன்ற வெற்றிகர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவர் இவர்.

ஹிந்தி மற்றும் பஞ்சாபி படங்கள் பலவற்றிலும் இவர் தோன்றியுள்ளார்.

காரை ஓட்டிச்சென்ற ஜஸ்பாலின் மகன் ஜஸ்ராஜும், படத்தின் நாயகி சுரிளி கௌதமும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.