இந்திய- பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகள் மீண்டும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 அக்டோபர், 2012 - 15:24 ஜிஎம்டி
இருநாட்டு கிரிக்கெட் உறவுகளும் கடந்த 5 ஆண்டுகளாக முடங்கியிருந்தன.

இருநாட்டு கிரிக்கெட் உறவுகளும் கடந்த 5 ஆண்டுகளாக முடங்கியிருந்தன.

இந்திய அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவுகளை தொடங்குவதற்கு இணங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு இருபது-இருபது போட்டிகளிலும் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா செல்கிறது.

2008-ம் ஆண்டில் இந்தியாவில் மும்பை நகரில் பாகிஸ்தானிய ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர் இருநாட்டு உறவுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அதன் விளைவாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக இருதரப்பு நேரடி கிரிக்கெட் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.