ஆப்கானில் தொழில் தொடங்க இந்தியர்கள் தயங்க வேண்டாம்: கர்சாய்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 நவம்பர், 2012 - 15:32 ஜிஎம்டி
ஹமீத் கர்சாய்

அதிபர் ஹமீத் கர்சாய்

இந்தியத் தொழிலதிபர்கள் ஆப்கானில் தொழில் வாய்ப்புகளைத் தேடத் தயங்கக்கூடாது என்று இந்தியா வந்துள்ள ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய முதலீட்டாளர்களை ஆப்கானிஸ்தான் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் என்று ஆனால் இந்திய தொழிலதிபர் அதற்கான முதல் முயற்சிகளில் இறங்க வேண்டும் என்றும் தனது இந்திய விஜயத்தின் துவக்க நாளில் கர்சாய் கூறினார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நேட்டோ துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அந்நாட்டில் தனது செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்ள இந்தியா விரும்புகிறது.

ஆனாலும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக அந்நாட்டின் முதலீடு செய்ய இந்திய தனியார் துறை தயங்குகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.