இந்தியாவில் தீபாவளி பட்டாசு விபத்தில் 8 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 நவம்பர், 2012 - 11:00 ஜிஎம்டி
பட்டாசு தயாரிப்பாளர்கள் சட்டவிதிகளை சரியாக பின்பற்றாமையாலேயே பல விபத்துக்கள் நடப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட்டாசு தயாரிப்பாளர்கள் சட்டவிதிகளை சரியாக பின்பற்றாமையாலேயே பல விபத்துக்கள் நடப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டாசு பொருட்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்த வீடொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடங்கலாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் நான்கு பெண்களும் மூன்று சிறார்களும் அடங்குகின்றனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆரோவ்யா மாவட்டத்தில், ஹிம்மாட்பூர் கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து இருந்தவேளையில் நேற்று திங்கட்கிழமை இரவு இந்த வெடிவிபத்து நடந்திருக்கிறது.

இந்தியாவில் பட்டாசு ஆலைகளிலும் பண்டிகைக் காலங்களிலும் இவ்வாறான வெடி விபத்துக்கள் அடிக்கடி நடந்துவருகின்றன.

கடந்த செப்டெம்பரில், தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் உடல்கருகி பலியானார்கள்.

நேற்றிரவு நடந்த விபத்தின்போது, வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த பட்டாசுப் பொருட்கள் வெடித்ததில் வீட்டின் கூரை பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

கிராமத்துக்கு வெளியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திச்செல்ல இருந்த அனுமதியைப் பயன்படுத்தி, வீட்டின் உரிமையாளர் வெடிபொருட்களை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.