கருக்கலைப்பு மறுப்பு: சவீதா மரணம் எழுப்பும் கேள்விகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 நவம்பர், 2012 - 17:55 ஜிஎம்டி
சவீதா ஹலப்பனாவர்

சவீதா ஹலப்பனாவர் இறக்க நேரிட்டது தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

ஐயர்லாந்தில் மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு தேவைப்பட்ட இந்தியப் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததையடுத்து, அயர்லாந்தில் கருக்கலைப்பு தொடர்பான சட்டம் திருத்தப்பட வேண்டும் என இந்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.

அயர்லாந்து தமிழ் சங்க செயற்பாட்டாளர் பிலிப்ஸ் செவ்வி

ஐயர்லாந்து இந்திய சங்க செயற்பாட்டாளர் கருத்து

ஐயர்லாந்தில் இறந்துபோன சவீதாவின் குடும்ப நண்பரும், அங்குள்ள இந்தியர்களுக்கான சங்கத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவருமான பிலிப்ஸ் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கருக்கலைப்பு தொடர்பில் கத்தோலிக்க சித்தாந்தங்கள் சொல்வது என்ன?

பூவிருந்தவல்லியில் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் இயக்குனரும் கிறிஸ்தவ ஒழுக்க இறையியலாளருமான டாக்டர் சாமுவேல் சாவியோ

கருக்கலைப்பு பற்றி கிறிஸ்துவ மதம் என்ன சொல்கிறது?

பூவிருந்தவல்லியில் உள்ள குருத்துவக் கல்லூரியின் முன்னாள் இயக்குனரும் கிறிஸ்தவ ஒழுக்க இறையியலாளருமான டாக்டர் சாமுவேல் சாவியோ தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஐயர்லாந்தில் வாழ்ந்துவந்த இந்தியப் பல் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர் கருத்தறித்த பின்னர் அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக அவர் தனது கருவை கலைத்துவிட வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது.

ஆனால் கத்தோலிக நாடான ஐயர்லாந்தில் கருக் கலைப்பு செய்ய சட்டப்படி தடை இருக்கிறது.

அதனால் அவருக்கு கருக்கலைப்பு செய்ய அங்குள்ள மருத்துவர்கள் மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சவீதாவின் கரு தானாக கலைந்தபோது செப்டிசீமியா என்ற மோசமான பாதிப்புக்கு உள்ளாகி சவீதா இறந்துவிட்டார்.

அயர்லாந்தில் விரும்பத்தகாத கருக்களை கலைக்க பெண்கள் அண்டையிலுள்ள ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் மற்ற நாடுகளுக்கும் வருவது பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

சவீதா உயிரிழந்ததை அடுத்து கருக்கலைப்பு செய்யும் உரிமையை பெண்களுக்கு மறுக்கமுடியுமா என்ற ஒரு விவாதம் எழுந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் இந்தியத் தூதர் அயர்லாந்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கவலை வெளியிட்டுள்ளதோடு விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.