'சாதி மோதல்களுக்கு பெண்களின் திருமண வயதும் காரணம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2012 - 15:36 ஜிஎம்டி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தினால் காதல் திருமணங்களின் விளைவாய் எழும் சாதி மோதல்களைத் தடுக்கமுடியும் என்று கூறியிருக்கிறார்.

வன்னியர் சாதிப் பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட பின்னணியில் கடந்த நவம்பர் 7ஆம் நாளன்று தர்மபுரியில் 200க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன,

அவற்றுக்குத் தீயும் வைக்கப்பட்டு தலித் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அண்டைப் பகுதிகளில் தஞ்சமடைய நேரிட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'நாடக திருமணங்கள் கூடாது': ராமதாஸ்

'காதல் நாடகத் திருமணங்களை தடுக்க வேண்டும்': ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் வன்னியர் நலனை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மட்டும் இந்த சம்பவங்கள் குறித்து கருத்தெதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.

தலித் மக்கள் மத்தியில் பரவலான செல்வாக்கு பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வன்னியர்களும் பாமகவுமே தலித்துக்கள் மீதான தாக்குதலுக்குக் காரணமென நேற்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களை சென்னையில் சந்தித்த டாக்டர் ராமதாஸ், தர்மபுரி சம்பவங்கள் தனக்கு வேதனை அளிப்பதாகவும், ஆனால் வன்னியர்களோ தனது கட்சியோ திட்டமிட்டு எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் கூறினார்.

'கலப்புத் திருமணம் நல்லது': அரவிந்தன் நீலகண்டன்

'காதல் திருமணங்கள் சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்'

அரவிந்தன் நீலகண்டன் கருத்து.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

மாறாக தலித்துக்களுக்கும் மற்ற அனைத்துப் பிரிவினருக்குமிடையே கனன்றுகொண்டிருந்த விரோதமே காதல் திருமணம் என்ற பின்னணியில் கலவரமாக மூண்டது என்றும் அவர் கூறினார்.

மேலும் அறியாப் பருவத்தில் பெண்கள் காதல் வலையில் வீழ்வதைத் தடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காதல் திருமணத்தைத் தான் எதிர்க்கவில்லை என்றும் சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன் காதலில் இறங்குவதுதான் தவறு என்றும் அவர் கூறினார்.

தலித் பகுதிகளுக்கு அருகாமையில் வாழும் மற்ற இனப் பெண்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாவதாகவும் இதற்கெல்லாம் அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி வன்முறைகளில் 268 வீடுகள் எரிக்கப்பட்டன, 54 வாகனங்கள் அழிக்கப்பட்டன, ஆபரணங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

நவம்பர் 7-ம் திகதி நடந்த தர்மபுரி வன்முறைகளில் 268 வீடுகள் எரிக்கப்பட்டன, 54 வாகனங்கள் அழிக்கப்பட்டன, ஆபரணங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

வன்னிய சாதியினர் கலப்புத் திருமணம் செய்வதைக் கடுமையாக விமர்சனம் செய்து, சர்ச்சைக்குரிய பல கருத்துக்களைத் தெரிவித்துவரும் பாமக சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவும் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்கள் கைவிடப்படும்போது அவர்களது குடும்பத்தினர் கொதித்தெழுவது இயற்கையே என்றார்.

தர்மபுரியில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருந்தாலும் தலித் மாணவர்கள் அச்சத்தில் மூழ்கியிருப்பதாகவும் பள்ளிகளில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.