எச் ஐ வி பரவல் வீதம் குறைகிறது - ஐ நா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 நவம்பர், 2012 - 15:19 ஜிஎம்டி
எச் ஐ வி தொற்றை ஏற்படுத்தும் கிருமி

எச் ஐ வி தொற்றை ஏற்படுத்தும் கிருமி

எச் ஐ வி நோய்க்கான சிகிச்சையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் பயன் பெறுகின்ற அதேவேளையில், பல நாடுகளில் எச் ஐ வி தொற்று ஏற்படும் வீதத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இந்த தொற்று நோய் பரவுதல் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாக, யுஎன் எயிட்ஸ் நிறுவனம் விபரிக்கிறது.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளிலேயே குறிப்பிடத்தக்க பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மலாவியிலும், பொட்ஸ்வானாவிலும் தொற்று வீதம்70 வீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது.

சிகிச்சையும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. தொற்று ஏற்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் வைரஸ் எதிர்ப்பு மாத்திரகளை பெறுகிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.