குஜராத்தில் பாஜக, ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 டிசம்பர், 2012 - 18:47 ஜிஎம்டி

இந்தியாவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிக் களிப்பில் பாஜக ஆதரவாளர்கள்

இந்தியாவில் குஜராத் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் நான்காவது முறையாக வெற்றி பெறுகிறது.

மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வென்றதை விட இது இரண்டு இடங்கள் குறைவு. அதே நேரம் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்று 61 இடங்களை கைபபற்றியுள்ளது.

ஆனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் அக்கட்சிக்கு கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை.

மீண்டும் முதல்வராகிறார் மோடி

மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடி 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்வேதா பட்டை வென்றார்.

ஸ்வேதா பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்ஜீவ் பட்டின் மனைவி என்பது குறிப்பிடத்தகுந்தது.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்ஜும் மோத்வாடியா தோல்வியடைந்துள்ளார். பா ஜ க விலும் சில பிரபலங்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய கேஷுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி படு தோல்வியடைந்துள்ளது.

வெற்றிக்கு யார் காரணம்? பாஜக கருத்து

வெற்றிக்கு யார் காரணம்: மோடியா, கட்சியா?

குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதற்கு காரணம் கட்சியா அல்லது முதல்வர் நரேந்திர மோடியா எனும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்த வெற்றியை ஆறு கோடி குஜராத்திகளுக்கு காணிக்கையாக செலுத்துவதாக மோடி தெரிவித்துள்ளார். இந்த வெற்றி நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் குஜராத்தில் தமது கட்சிக்கே வெற்றி என்று இந்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

ஹிமசல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி

தேர்தல் பிரச்சாரத்தின் போது சோனியா காந்தி

ஹிமாசல் பிரதேச சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த பிரேம் குமார் டுமல் வெற்றி பெற்றாலும் தமது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.

அங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் யார் முதல்வராக தேர்தெடுக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

மாநில சட்டசபையில் உள்ள 68 இடங்களில், காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.