டெல்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் 5-வது நபர் கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 டிசம்பர், 2012 - 12:09 ஜிஎம்டி
டெல்லியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள்

டெல்லியில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிறன்று பேருந்துக்குள் வைத்து இளம்பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்தாவது நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேருந்தின் சாரதி உள்ளடங்கலாக நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 23 வயது மாணவி தொடர்ந்தும் டெல்லி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்தியா முழுவதிலும் பெரும் கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் விளைவாக, டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பல திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இரவில் போலிஸ் ரோந்துக்களை அதிகப்படுத்தவும் பேருந்து சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை சோதனையிடவும் வாகனங்களின் யன்னல்களில் கறுப்புக் கண்ணாடி மற்றும் திரைகள் போடுவதைத் தடுக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் தேகப்பயிற்சி ஆலோசகர் ஒருவரும் பழவியாபாரி ஒருவரும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்தாவது நபர் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிட முன்னதாக அவர் வயது வந்தவரா என்பது பற்றி உறுதிசெய்ய வேண்டியிருப்பதாகவும் டெல்லி காவல்துறைத் தலைவர் நீராஜ் குமார் கூறியுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.