மணிப்பூர் ஊடகவியலாளர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 டிசம்பர், 2012 - 11:33 ஜிஎம்டி
தில்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தைக் கண்டித்து குடியரசுத் தலைவர் மாளிகை முன்பாக சனியன்று நடந்த பெரிய ஆர்ப்பாட்டம்

தில்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தைக் கண்டித்து குடியரசுத் தலைவர் மாளிகை முன்பாக சனியன்று நடந்த பெரிய ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் திரைப்பட நடிகை மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதலைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரைம் நியூஸ் என்ற செய்தித்தாளுக்கு வேலைபார்த்து வந்த 29 வயது நனொவா சிங் கொல்லப்பட்டார்.

பொலிஸ் வாகனத்துக்கு தீவைத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நனோவா சிங் பின்னர் இம்பால் அரசு மருத்துமனையில் உயிரிழந்தார்.

மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதியன்று நடந்த ஒரு இசை நடன நிகழ்ச்சியின்போது நாகா ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் ஒருவரால் பொதுவிடத்தில் வைத்து பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக மணிப்பூரி திரைப்பட நடிகை மொமோகோ கூறியதை அடுத்து அந்நபர் கைதுசெய்யப்பட வேண்டுமெனக் கோரி மணிப்பூரில்ஆர்ப்பாட்டங்களும் பொது வேலைநிறுத்துமும் நடந்துவருகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.