வட இந்தியாவில் கடும் குளிர்; 25 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 டிசம்பர், 2012 - 12:02 ஜிஎம்டி
வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள.

வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள்.

வட இந்தியா முழுவதும் நிலவும் கடும் குளிர் காரணமாக குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச வானொலி அறிவித்துள்ளது.

உத்திர பிரதேசத்திலேயே கூடுதலானோர் குளிருக்குப் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகிய மற்ற வடஇந்திய மாநிலங்களிலும் கடுமையான குளிர் காலநிலை நிலவுகிறது.

வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள்.

தலைநகர் டெல்லியிலும் அண்டை மாநிலங்களிலும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் வெப்பநிலை 7 பாகை வரை குறைந்து, கடும் குளிர் காணப்படுகிறது. அங்கு விமான பயண நேரங்களும் குழம்பியுள்ளன.

ராஜஸ்தானில் வெப்பநிலை 3.8 பாகை வரை குறைந்து மாநிலமே உறைந்துபோயுள்ளது. அங்கும் ரயில்களும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குளிர் காலநிலை இன்னும் பல நாட்களுக்கு நீடிக்குமென்று இந்திய வானிலை ஆய்வு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.