இந்தியாவில் கடுங்குளிருக்கு மேலும் இருபது பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஜனவரி, 2013 - 11:23 ஜிஎம்டி
வீதியில் வாழும் ஏழை மக்கள் கடுங்குளிரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

வீதியில் வாழும் ஏழை மக்கள் கடுங்குளிரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிரின் காரணமாக குறைந்தது இருபது பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய குளிர் காலத்தில் மட்டும் இந்தியாவில் சீதோஷ்ண நிலையின் காரணமாக உயிரிழக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கை நூற்று முப்பதாக அதிகரித்துள்ளது.

இந்த குளிர் காலத்தில் மிக அதிகமான வெப்ப நிலைச் சரிவைச் சந்தித்த மாநிலம் உத்தர பிரதேசம் ஆகும்.

ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல ஊர்களிலும், தலைநகர் தில்லியிலுங்கூட கடுங்குளிர் தாக்கியது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான வெப்ப நிலை தில்லியில் சென்ற வாரம் தில்லியில் பதிவாகியிருந்தது.

பல நகரங்களில் அடர்த்தியான மூடுபனியும் பரவியுள்ளதால் பொதுப்போக்குவரத்து சேவைகளும் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.