டெல்லி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜனவரி, 2013 - 11:01 ஜிஎம்டி
டெல்லியிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றுக்கு சந்தேகநபர்கள் கொண்டுவரப்படுவதாக நம்பப்படும் வாகனம்

டெல்லியிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றுக்கு சந்தேகநபர்கள் கொண்டுவரப்படுவதாக நம்பப்படும் வாகனம்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவரது கொலைக்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டபின்னர், அவர்கள் தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற அறை மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் நிலையில், அங்கு ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் விசாரணைகள் மூடிய அறைக்குள்ளேயே நடக்கும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

சந்தேகநபர்களுக்காக ஆஜராகவிடாமல் வழக்கறிஞர்களை தடுப்பது சரியா?

டெல்லி சந்தேக நபர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராவதை தடுக்கலாமா?

இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவர், மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அரசுக்கு சார்பான சாட்சியங்களாக மாற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆறாவது சந்தேகநபர் 17 வயதானவர் என்பதால் அவர்மீதான குற்றச்சாட்டு சிறார்-குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

முதல் ஐந்துபேருக்கு எதிரான வழக்கு மேல்நீதிமன்றத்தின் விரைவு- விசாரணைக்கு மாற்றப்படவுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் நடந்த இந்த பாலியல் வல்லுறவு விவகாரம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் பெரும் போராட்டங்களுக்கு காரணமானமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.