மதுரைக்குள் நுழைய ராமதாஸுக்கு தடை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜனவரி, 2013 - 14:38 ஜிஎம்டி

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிவரை மதுரை மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் இப்படியான ஒரு தடையாணை உத்திரவினைப் பிறப்பித்தது.

புதிதாக அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற ஓர் அமைப்பினை உருவாக்கி, அதில் பல்வேறு சாதி அமைப்புக்களை ஒருங்கிணைத்து தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும், பிற சாதிப் பெண்களை தலித் இளைஞர்கள் ஏமாற்றித் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கவேண்டும் என்பன போன்ற சர்ச்சைக்குரிய கோரிக்கைகளுக்கு ராமதாஸ் ஆதரவு திரட்டிவருகிறார்.

மதுரையில் கடந்த டிசம்பர் 21ஆம் நாள் கூடிய இந்த பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுக்களை விசாரித்து அதன்பேரில் தற்போதைய தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.