'பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை': மன்மோகன் சிங்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 ஜனவரி, 2013 - 17:02 ஜிஎம்டி
பிரதமர் மன்மோகன் சிங்

பிரதமர் மன்மோகன் சிங்

பாகிஸ்தானுடனான உறவுகள் சுமுகமாக இருக்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் இருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இருநாட்டு உறவுகளும் மோசமடைந்துவருகின்றன.

இந்தியப் படைவீரர் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கடந்தவாரம் அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களுக்கு பாகிஸ்தான் படையினரே பொறுப்பு என்று இந்தியா குற்றஞ்சாட்டுகின்றது.

ஆனால் பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.

தமது படைவீரர்கள் கொல்லப்பட்ட செயலை காட்டுமிராண்டித் தனமானது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்துள்ளார்.

அண்மைய இருதரப்பு மோதல்களில் பாகிஸ்தான் படைவீரர்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள்.

இந்த சம்பவங்களால் இருநாட்டு உறவுகளிலும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.