சட்டவிரோத காண்டாமிருக வேட்டை அதிகரிக்கிறது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 பிப்ரவரி, 2013 - 11:56 ஜிஎம்டி
தந்தங்களுக்காக காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன

தந்தங்களுக்காக காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காஸிரங்கா தேசிய பூங்காவில் மேலும் ஓர் காண்டாமிருகம் அதன் தந்தத்துக்காக சட்டவிரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளது என மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வாரத்தில் மட்டும் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்படும் நான்காவது காண்டாமிருகம் இது என்று அவர்கள் கூறுகின்றனர்.

யுனெஸ்கோ அமைப்பால் உலகின் இயற்கை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட காஸிரங்கா தேசியப் பூங்காவில் கடந்த ஒரு மாத காலத்தில் சட்டவிரோதமாக சுடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

வேட்டையாடிய ஐந்து பேருக்கும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடந்தது என்றும், வேட்டைக்காரர்கள் தப்பிச் செல்லவே, கடைசியாக கொல்லப்பட்ட காண்டாமிருகத்தின் உடலில் இருந்து தந்தம் அறுத்து எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் ஆகும்.

ஆனால் அவற்றின் தந்தம் சில சீன மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், அவற்றின் விலை மதிப்பு மிகவும் அதிகம்.

அஸ்ஸாமில் வனப் பகுதிகளில் மொத்தத்தில் இரண்டாயிரத்து ஐநூறு அளவிலான காண்டா மிருகங்கள் வாழ்வதாக மாநில அரசு கூறுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.