இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 பிப்ரவரி, 2013 - 17:16 ஜிஎம்டி
பின்மெக்கானிகாவின் விமானம்

பின்மெக்கானிகாவின் விமானம்

இத்தாலியின் விமானத் தயாரிப்பு மற்றும் ஆயுதத் தளவாட நிறுவனமான பின்மெகானிகாவின் தலைமை அதிகாரி இந்தியாவுடன் தொடர்புடைய ஒரு பரிவர்த்தனையில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற தலைமை அதிகாரி கியுசேபி ஒர்சி லஞ்சம் கொடுத்துள்ளார் என்ற புகார் தொடர்பில் பல மாதங்களாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒர்சி மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டபிறகு பின்மெக்கானிகாவின் பங்குகளின் மதிப்பு 9 சதவீதம் வீழ்ந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும் என்று இத்தாலிய பிரதமர் மாரியோ மாண்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

பின்மெக்கானிக்காவின் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றன–அதை நாம் சந்திக்க வேண்டும் என்றும் இத்தாலியப் பிரதமர் கூறியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் வாழும் இருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா வாங்கிய ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் கிளையின் தலைவர் வீட்டுக் காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமக்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்று இந்தியா கூறுகிறது. ஆயினும் இந்த விடயம் குறித்து தனியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

பின்மெகானிகாவின் 30 சதவீதப் பங்குகளை இத்தாலி அரசுதான் வைத்துள்ளது. சுமார் 4000 ஆயிரம் கோடி ரூபாய் பெருமானமுள்ள 12 ஹெலிகாப்படர்களை வாங்க 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இந்த நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன அடிப்படையில் ஏற்கனவே மூன்று விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போதே அதில் ஊழல் பணம் கொடுக்கக் கூடாது என்று ஒரு விதி இருந்த்தாகவும் – அப்படி பணம் கொடுத்திருந்தால் அந்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.