ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா நடவடிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 17:32 ஜிஎம்டி
அகஸ்ட்டா ஹெலிகாப்டர்

அகஸ்ட்டா ஹெலிகாப்டர்

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இத்தாலிய நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவிடம் இருந்து இந்தியா 12 ஹெலிகாப்டர்களை வாங்குகின்ற 75 கோடி டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடைமுறைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.

ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முறைப்படி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஏழு நாட்களில் பதிலும் கோரியிருக்கின்றது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி இத்தாலியில் பதவி விலகியுள்ளார்.

ஃபின்மெக்கானிக்காவுக்கு பிரிட்டனில் துணை நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட மூன்று ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுவிட்டன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.