காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 11:01 ஜிஎம்டி
கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியப் படையினர்

கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியப் படையினர்

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தின் எல்லையில் இந்தியப் படையினர் பாகிஸ்தான் சிப்பாய் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இரு தரப்புக்குமிடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமது படைச் சிப்பாய் ஒருவருக்கும் காயமேற்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறித்தப் பிராந்தியத்தைப் பிரிக்கின்ற கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை தமது படைவீரர் தற்செயலாக கடந்துவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது.

ஆனால் ஆரம்பத்தில் பாகிஸ்தான் படைவீரர் என்று தாம் அறிந்திருக்கவில்லை என்றும் சந்தேகமான முறையில் ஒருவர் எல்லைக்குள் ஊடுறுவுவதை அவதானித்த போது தமது படைவீரர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்திய இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தப் பிராந்தியத்தில் கடந்த மாதத்திலும் நடந்த தொடர் மோதல் சம்பவங்களில் மூன்று பாகிஸ்தானிய சிப்பாய்களும் இரண்டு இந்திய சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்களால் இருநாட்டு உறவுகளும் மேலும் மோசமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.