அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2013 - 11:21 ஜிஎம்டி

காவிரி நதி

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்திய அரசிதழில் இன்று(20.2.13) புதன்கிழமை வெளியானது.

இவ்வாறாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசிதழில் பதிவாகியிருக்கிறது.

அரசாணையின் நகல் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு, இனி காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலமே மேற்கொள்ளப்படும்.

இறுதித் தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்த அமைப்பே நீரை பங்கிட்டு வழங்கும்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும் என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜெயலலிதா வரவேற்பு

மேட்டூர் அணை

இந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது, தனது 30 வருட அரசியல் வாழ்விலேயே மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நாளென்றும், இதற்காகத்தான் 22 ஆண்டுகளாகத் தாம் போராடிவந்ததாகவும், தனக்கும், டெல்டா பகுதி விவசாயிகளுக்கும் இது மாபெரும் வெற்றியென்றும் இனியும் நடுவர் மன்ற ஆணைப்படி தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிட கர்நாடகம் மறுக்கமுடியாதெனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே வேளை கர்நாடகத்தில் இதற்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.