நடவடிக்கை வேண்டும் - ஜெயலலிதா, கருணாநிதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2013 - 10:52 ஜிஎம்டி
தமிழக முதல்வர் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் புரிந்ததை உறுதிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஐ.நா அவையில் கண்டனத்தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும். அதுகுறித்த அமெரிக்க முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்கவேண்டும் மேலும் தமிழர்கள் இலங்கையில் கண்ணியமாக வாழவகைசெய்யப்படும்வரை இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டுமன அவர் இன்று புதன் கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே போன்று திமுக தலைவர் கருணாநிதியும் இலங்கை மீது போர்க்குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்துவரும் முயற்சிகளுக்கு இந்தியா வலு சேர்க்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி என்பதற்கான உறுதியானதோர் ஆதாரம் இது. இதற்கு மேலும் ஆதாரம் தேடி உலக நாடுகளோ, ஐ. நா. மன்றமோ வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. அதற்காக எந்த விசாரணையும் மேற்கொள்ளவும் தேவையில்லை. என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி கூறியிருக்கிறார்.

பாலகன் பாலச்சந்திரன் சேனல் 4 வெளியிட்டிருப்பதைப் போல, கொடூரமாக கொல்லப்பட்டிருந்தாலும், போரின் போது ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தாலும் எப்படியும் அது கொலைதான். அப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு, அந்தப் பாலகன் செய்த குற்றம் என்ன? அதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும் என சுட்டிக்காட்டுகிறார் கருணாநிதி.

கடந்த ஆண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலத்தில் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறைகூறுகிறார் கருணாநிதி.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.