'ஹைதராபாத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 பிப்ரவரி, 2013 - 10:59 ஜிஎம்டி


இந்தியாவின் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறியிருக்கும் இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே அவர்கள், இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை இப்போதே கூறமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

100 க்கும் அதிகமானோர் இதில் காயமடைந்திருக்கிறார்கள்.

குண்டு வெடித்த இடத்துக்கு சென்று பார்வையிட்ட சிண்டே அவர்கள், பொதுவான அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கத்துக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்தாலும், ஹைதராபாத் தாக்குதல் குறித்து குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கிடைத்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

18 மாதங்களுக்கு முன்னதாக டில்லியில் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவில் நடந்த பெரிய குண்டுத்தாக்குதல் இதுவாகும்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.