தமிழகத்தில் மீண்டும் அமில வீச்சில் ஒரு பெண் மரணம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2013 - 12:00 ஜிஎம்டி

அமில வீச்சில் மேலும் ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரைக்காலைச் சேர்ந்த விநோதினி என்ற கணினிப் பொறியாளர் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பரில் அமிலம் வீச, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சை பயனளிக்காது ஒரு சில நாட்களுக்கு முன் தான் விநோதினி இறந்தார்.

அதே போன்றுதான் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு ப்ரௌசிங் மையத்தில் பணிபுரிந்து வந்த வித்யா மீது அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய விஜயபாஸ்கர் என்பவர், தொடர்ந்து திருமணம் தாமதமாகிப்போனதால் ஆத்திரமடைந்து அப்பெண் மீது அமிலத்தை வீச, அவர் படுகாயமடைந்தார்.

வித்யா சிகிச்சை பயனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

உயிருடன் இருக்கையில் கண்தானம் செய்ய விரும்புவதாக அவர் கூறி வந்துள்ளார், எனவே . அவர் இறந்த பிறகு அவரது விருப்பப்படி அவருடைய கண்கள் தானமாக அளிக்கப்பட்டன என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

காரைக்கால் சம்பவத்தில் சுரேசும் சென்னை சம்பவம் தொடர்பாக விஜயபாஸ்கரும் கைதாகி சிறையிலடைக்கப்பட்டுவிட்டனர்.

ஆயினும் அமில வர்த்தகத்தை நெறிப்படுத்தவேண்டும், எவரும் எளிதில் வாங்கமுடியும் என்ற இன்றைய நிலையினை மாற்றவேண்டுமென ஆர்வலர்கள் கோருகின்றனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.