இந்தியாவில் ரயில் பட்ஜெட் தாக்கல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 பிப்ரவரி, 2013 - 15:02 ஜிஎம்டி
ரயில்

ரயில்

வரும் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்டண உயர்வு இல்லை என்றாலும், முன்பதிவுக் கட்டணம் உள்ளிட்ட சில மறைமுக கட்டண உயர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக 67 விரைவு ரயில்களும், 26 பயணிகள் ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சகத்தில் காலியாக உள்ள 1 லட்சத்து 52 ஆயிரம் இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை சுமார் 5 சதவீதம் அளவுக்கு உயரும் என்றாலும் பயணிகள் போக்குவரத்து காரணமாக ரயில்வே 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வேயை பயன்படுத்துவோரின் குறை தீர்க்க கட்டணமில்லா தொலைபேசி சேவையும் இயக்கப்பட உள்ளது. இந்த எண் - 1800111321 - பிப்ரவரி 23 ஆம் தேதியன்றே இயங்கத் துவங்கிவிட்டதாக ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் தெரிவித்தார்.

ஆளில்லா லெவல் கிராசிங்குகளை படிப்படியாக அக்ற்றுதல், பயணிகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தல், கூடுதல் வசதிகள் உள்ளிட்டவையும் அமைச்சர் பன்சலின் அறிவிப்பில் அடங்கும். தமிழகத்தில் புதிதாக 14 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

ஏமாற்றம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்படவில்லை தமிழகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்பட்டுள்ளளது என்று சாடியுள்ளார். புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னக ரயில்வேயின் ஆலோசனைக் குழு உறுப்பினர் மோஹன்ராம் பயணக்கட்டணத்தினை உயர்த்தாதது வரவேற்கத்தகுந்ததென்கிறார்.

வசதிகளையும் பாதுகாப்பையும் அதிகரிக்கவென அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளையும் வரவேற்ற மோகன்ராம், தமிழகத்திற்கென புதிய ரெயில்கள் என்று அறிவித்தாலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவை கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன, புதிய திட்டங்களும் தொலைநோக்கோடு அறிமுகப்படுத்தப்படவில்லை எனக்குறை கூறுகிறார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.