மும்பை : கட்டிடம் இடிந்து 45 பேர் பலி

அங்கீகரிக்கப்படாத கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம்45 பேராவது கொல்லப்பட்டதாக இந்தியாவின் மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் 11 பேர் சிறார்கள் ஆவர்.

இன்னமும் கட்டி முடிக்கப்படாத இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்னதாகவே ஆட்கள் பலர் குடியேறிவிட்டனர்.

இடிந்த கட்டிடத்தில் இன்னமும் உயிர் தப்பியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று மீட்பு பணியாளர்கள் தேடுதல் நடத்துகிறார்கள்.

இறந்தவர்களில் அந்த அடுக்கு மாடித்தொடரில் இருக்கும் குடும்பங்களின் உறுப்பினர்களும், கட்டிடப் பணியாளர்களும் அடங்குகிறார்கள்.

பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக செய்யப்படாத சூழ்நிலையில் கட்டிடங்கள் இடிந்துபோவது என்பது இந்தியாவில் புதிய விடயமல்ல என்று மும்பையில் இருக்கு பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.