இலங்கை வட மாகாணசபைத் தேர்தல் கேள்விக்குறியானது: கருணாநிதி

  • 28 மே 2013
திமுக தலைவர் கருணாநிதி
Image caption திமுக தலைவர் கருணாநிதி

இலங்கையின் வட மாகாண சபைக்கு திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுவது கேள்விக்குறியாகி விட்டதாக திமுக தலைவர் மு கருணாநிதி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் இன்று செவ்வாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்காமல் தடுக்கவும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யவும் முயற்சிகள் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி தரப்படும் என்ற இலங்கை அமைச்சர் ராஜித்த சேனாரத்தின செய்த அறிவிப்பை சுட்டிக்காட்டி, மீன்பிடித்தலில் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய நடைமுறை ராமேஸ்வரம் மீனவர்களை கவலையில் ஆழ்த்தியிருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டினால் அபராதம் விதிக்கலாம் என்று யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.