நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 5 வீத பங்கினை விற்க மத்திய அரசு முடிவு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
Image caption நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

தமிழகத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் பங்கில் ஐந்து சத வீதத்தை விற்பதென்று மன்மோகன் சிங் அமைச்சரவை இன்று வெள்ளிக் கிழமை முடிவெடுத்துள்ளது.

பங்கினை அவ்வாறு விற்பதன் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்திருந்தார்.

திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் பங்கு விற்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 93.5 சதவீத பங்கு மத்திய அரசிற்கு உள்ளது.

ஆனால் செபி எனப்படும் சுயாதீனமான முதலீடு குறித்த வாரியம் எந்தவொரு அரசு நிறுவனத்திலும் பொதுமக்களுக்கு குறைந்த பட்சம் 10 சத பங்காவது இருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதன்படியே இந்த விற்பனை நடப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

ஐந்து சதவீதப் பங்கினை விற்பதன் மூலம் 500 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

அந்த பணம் நெய்வேலி நிறுவனத்தை மேம்படுத்தவே பயன்படுத்தப்படும் எனவும் என்றும் மத்திய அரசு வாதிடுகிறது