காஷ்மீர்: பாத்கம் மாவட்டத்தில் கொந்தளிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு

  • 27 ஜூலை 2013
ஊரடங்கு உத்தரவு அமல்
ஊரடங்கு உத்தரவு அமல் (கோப்புப் படம்)

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் பாத்கம் மாவட்டத்தில் பெண்ணொருவரின் உயிரிழப்பு தொடர்பாக பரவலான கொந்தளிப்பு எழுந்ததை அடுத்து அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகாரிகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

பொலிஸ்காரர் ஒருவர் தலையில் அடித்ததால் இந்தப் பெண் இறந்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ஃபாத்திமா என்ற இந்த 57 வயதுப் பெண்ணை துப்பாக்கி பிடியால் தலையில் அடித்ததாக குற்றம்சாட்டப்படும் பொலிஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்த வாரத்தில் முன்னதாக அப்பகுதியில் சுனி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் நடந்த சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மேலும் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக பாத்கம் நகருக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் கூடுதலான பாதுகாப்பு படைகள் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.