பிஹாரில் பெண் பொலிஸ் மீது பாலியல் தாக்குதல்

  • 24 ஆகஸ்ட் 2013
இந்தியாவில் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவந்துள்ளன.
Image caption இந்தியாவில் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவந்துள்ளன.

பிகாரில் காவல்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர், வழிப்பறிக் கொள்ளையர்களால் கூட்டு வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இறந்த தனது மைத்துனனின் உடலை ஒரு வண்டியில் வைத்து அதை உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுகொண்டிருந்த வேளையில் இந்த பெண் காவலர் தாக்குதலுக்கு உள்ளானார்.

லதேஹர் மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை வெள்ளிக்கிழமை வழிமறித்த கொள்ளையர்கள் முப்பது வயதுக்குட்பட்ட இந்தப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காவல்துறையில் பணிபுரிந்த இந்தப் பெண்ணின் கணவர் மாவோயிய தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து, கருணை அடிப்படையில் அவருக்கு காவல்துறையில் பணி வழங்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு டெல்லியில் துணை மருத்துவம் படித்து வந்த மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு மரணம் அடைந்தார்.

இதையடுத்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. பெண்களுக்க எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டமும் கடுமையாக்கப்பட்டது.

ஆனால் களநிலை மாறவில்லை என்பதைத்தான் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள் காட்டுவதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.