ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையின் தாகத்தை தணிக்குமா புதிய குடிநீர் திட்டம்?

சென்னை நகரின் குடிநீர் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஐந்தாவதாக நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் இருக்கும் இரு பெரிய ஏரிகளை ஒன்றாக இணைத்து நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் 330 கோடி ரூபாய்கள் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு குறித்து நீர்வள வல்லுநர் பேராசிரியர் எஸ் ஜனகராஜன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.