ஏற்காடு இடைத்தேர்தலில் சுறுசுறுப்பான வாக்குப்பதிவு

  • 4 டிசம்பர் 2013
Image caption ஏற்காடு இடைத்தேர்தல்-- திமுக வேட்பாளர் மாறன்

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று புதன் வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது.

பிற்பகல் ஒரு மணி வரை ஏறத்தாழ 43 சத வாக்குக்கள் பதிவாகியிருக்கின்றன என செய்திகள் கூறுகின்றன.

இத்தொகுதியில் அஇஅதிமுக சார்பில் பி.சரோஜாவும் திமுக சார்பாக இளைஞரணி நிர்வாகி வி மாறனும் போட்டியிடுகின்றனர்.

ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ இஅதிமுகவைச் சேர்ந்த பெருமாள், கடந்த ஜூலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கே தேர்தல் நடக்கிறது.

Image caption ஏற்காடு இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர் சரோஜா

அஇ அதிமுக வேட்பாளர் பி.சரோஜா மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவியாவார்.

ஆளும் அ இஅதிமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென திமுக தலைவர் மு கருணாநிதி பகிரங்கமாகவே கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு எவரும் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை.

இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவு அ இஅதிமுவிற்கே என அறிவித்துவிட்டன