ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"திமுக கூட்டணிக்கு வரும்படி விஜயகாந்தை அழைத்தேன்"

Image caption விஜயகாந்துடன் தொல் திருமாவளவன்

எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்தை தாம் நேரில் சென்று சனிக்கிழமையன்று அழைத்ததாக தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை கோயம்பேட்டில் இருக்கும் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும் திமுக தலைமையிலான அணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து தான் ஏற்கெனவே விடுத்து வந்த வேண்டுகோளை இன்று சனிக்கிழமை நேரிலே விஜயகாந்திடமே தெரிவித்ததாக கூறினார். "எந்த அணியில் இடம்பெறுவது, எவ்வாறு கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது தேமுதிக மற்றும் விஜயகாந்தின் தனிப்பட்ட உரிமை என்றாலும், தமிழ்நாட்டில் மதவாத பாஜகவும் ஜாதியவாத பாமகவும் வலுப்பெறுவதை தடுப்பதற்கு ஏதுவாக தேமுதிக திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்கிற தமது கட்சியின் விருப்பதை நேரிடையாக அவரிடம் கூறியுள்ளோம்", என்றார் திருமாவளவன்.

தமது வேண்டுகோளையும் கோரிக்கையையும் கவனமாக கேட்டுக்கொண்ட விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில் நடைபெற இருக்கும் தேமுதிக மாநாட்டின்போது தொண்டர்களின் விருப்பத்தை அறிந்து கூட்டணி குறித்து தமது முடிவை அறிவிப்பதாக தம்மிடம் தெரிவித்ததாக தொல் திருமாவளவன் கூறினார்.