இந்துக்கள் பற்றிய புத்தகம் விலக்கப்படுவது ஏமாற்றமளிக்கிறது: டோனிகர் பேட்டி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்து மதம் பற்றி தான் எழுதிய புத்தகம் இந்தியாவில் சட்ட சர்ச்சையை உருவாக்கி அப்புத்தகத்தின் அனைத்து நகல்களும் அழிக்கப்படவுள்ளது குறித்து அமெரிக்க எழுத்தாளர் வெண்டி டோனிகர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

புத்தகப் பதிப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படும் ஒரு இந்தியச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என பிபிசியிடம் பேசிய டோனிகர் கூறினார்.

"தி ஹிண்டூஸ்: அன் அல்டெர்னேடிவ் ஹிஸ்டரி" என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது என இந்து அமைப்பு ஒன்று குரலெழுப்பிய நிலையில், இப்புத்தகத்தை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக பென்குவின் பிரசுர நிறுவனம் அறிவித்தது.

இந்தியாவில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதலான வெற்றி வாய்ப்பை இந்து தேசியவாதம் பேசும் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளதற்கும் இந்தப் புத்தகம் சந்தையிலிருந்து விலக்கப்படுவதற்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்று டோனிகர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னால், இந்தியாவில் கருத்து சுதந்திரம் மேலும் மோசமடையலாம் என்ற அச்சம் காரணமாக இந்தப் புத்தகத்தை விலக்கிகொள்ள பென்குவின் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் பற்றி கருத்து வெளியிட பென்குவின் பிரசுர நிறுவனம் மறுத்துள்ளது.

இந்தச் செய்தி குறித்து மேலும்