சஹாரா நிறுவனத் தலைவர் நீதிமன்றில் ஆஜரானார்

  • 4 மார்ச் 2014
சஹாரா நிறுவனத் தலைவர் நீதிமன்றில் ஆஜரானார்
Image caption சஹாரா நிறுவனத் தலைவர் நீதிமன்றில் ஆஜரானார்

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய வணிகரான சுப்ரதா ராய் அவர்கள், தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.

இவரது சஹாரா குறூப் நிறுவனம் சிறிய முதலீட்டாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாக கோடிக்கணக்கான டாலர்களை சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அதனை அவர் மறுக்கிறார்.

அவர் நீதிமன்றத்துக்கு வந்த போது, அவர் மீது மையை விசிறி அடித்த ஒரு நபர், அவரை ''திருடன்'' என்று கோஷமிட்டார்.

இந்தியாவின் மிகவும் முக்கிய அரசியல்வாதிகளுக்கும், இந்தித் திரைப்பட நடிகர்களுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என்று நம்பப்படுகின்றது.

10 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள அவரது சஹாரா குறூப் நிறுவனம், இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் கொண்டுள்ளது.