போலி என்கவுன்டர்: 18 பொலிசார் மீது குற்றம் உறுதி

  • 6 ஜூன் 2014
இந்திய பொலிசார் (கோப்புப் படம்) படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய பொலிசார் (கோப்புப் படம்)

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 2009ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்டதை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்றம், பொலிஸ்காரர்கள் 18 பேர் மீது குற்றத்தை உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது.

எம் பி ஏ படித்துவந்த 22 வயது மாணவர் ஒருவர், கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருந்தார் என பொலிசார் சந்தேகித்ததால் அவரை சுட்டுக்கொன்ற பொலிசார், அதனை மறைக்க துப்பாக்கி சண்டை ஒன்று அங்கு நடந்ததாக போலியாக ஜோடித்திருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

போலி என்கவுன்டர் என்று சொல்லப்படுகின்ற சட்டத்துக்கப்பாற்பட்ட தண்டனை பாணியிலான இந்த ஆட்கொலைகள் இந்தியாவில் நடப்பது சகஜம்.

இந்த வழக்கில் குற்றத்தை நிரூபித்த தமது விசாரணையாளர்களை நினைத்து பெருமைப்படுவதாக மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐயின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.