பெங்களூர்: பள்ளிச் சிறுமி பாலியல் வல்லுறவு; பெற்றோர் போராட்டம்

  • 19 ஜூலை 2014
படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவில் பெங்களூரில் தனியார் பள்ளியொன்றின் ஊழியர்களால் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெற்றோர் பேரணி நடத்தியுள்ளனர்.

பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரும், காவலாளி ஒருவரும் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு உடைகள் அணிந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோசங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியபடி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

கல்லூரி மாணவர்கள், பெற்றோர், சமூக நல அமைப்பினர் ஆகியோரும் அடங்கிய நூற்றுக்கணக்கானோர் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

பள்ளிகள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு தரங்களை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் கையளித்தனர்.

மாரதஹள்ளியில் உள்ள இந்த பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப்பெற வரவேண்டும் என்று கர்நாடக மாநிலத்தின் பொது வழிமுறை துறை (டிபிஐ) இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளின் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.