நரேந்திர மோடி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அத்வானி, ஜோஷியின் அரசியல் வாழ்வு முடிகிறதா?

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கட்சி மீது மோடியின் பிடி வலுவாகிறது

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின், அதியுயர் அதிகாரக் குழுவிலிருந்து மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய குழு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவை உருவாக்கியவர்கள் என்று கருதப்படும் அத்வானி, ஜோஷி ஆகியோர் இனி கட்சியின் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்று கட்சியின் அறிவிப்பு கூறுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் அதியுயர் அதிகாரக் குழுவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறாதது இதுவே முதல் முறை.

"ஆர் எஸ் எஸ் ஆதிக்கம்"

படத்தின் காப்புரிமை AFP
Image caption அத்வானி, ஜோஷி இனி வழிகாட்டிகள்

கட்சியில் ஆர் எஸ் எஸ்ஸின் ஆதிக்கத்தையே இந்த அறிவிப்பு பிரதிபலிக்கிறது என, பிபிசி தமிழோசையிடம் கூறினார், இந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியரும் இந்திய அரசியல் திறனாய்வாளருமான என். ராம்.

பாரதிய ஜனதா கட்சியில் ஒரு புதிய கட்டம் ஆரம்பிப்பதையும் இந்த முடிவுகள் காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை hindu
Image caption என் ராம்

கட்சியின் இன்றைய அறிவிப்பின் மூலம், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது என்பது தெளிவாகிறது என்றும் கூறுகிறார் என்.ராம்.

அந்தக் கட்சியில் ஓய்வு குறித்த தெளிவான கொள்கை இல்லாதபோது, இந்த இரு தலைவர்களும் அதியுயர் அதிகாரக் குழுவிலிருந்து விலக்கப்பட்டுள்ளது, கட்சி முழுமையாக பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்பதைக் காட்டுகிறது எனவும் ராம் தெரிவித்தார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.