உதவி மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உள்ளடக்கம்:

இந்த இணையதளத்தை சிறப்பாக பார்ப்பது எப்படி?

இணையதளத்தில் காணொளிகளை காண்பதும் ஒலிக் கீற்றுகளைக் கேட்பதும் எப்படி?

RSS செய்திச்சேவை முகவரிகள் என்றால் என்ன?

புகைப்படங்கள், ஒலிக் கீற்றுகள் மற்றும் காணொளிகளை நான் உங்களுக்கு அனுப்புவது எப்படி?

கருத்து தெரிவிக்கும் படிவம்

பிபிசிதமிழ் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பது எப்படி?

ஜி.எம்.டி. என்றால் என்ன?

இந்த இணையதளத்தை சிறப்பாக பார்ப்பது எப்படி?

இந்த இணையதளமானது அகலத்தில் குறைந்தது 1024 பிக்செல்கள் காட்டத்தக்க கணினித்திரைகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கும் குறைவான பிக்செல்களையே காட்டும் கணினித்திரையில் நீங்கள் இந்த இணையதளத்தை பார்க்க நேர்ந்தால், பக்கவாட்டில் நகர்த்தி நகர்த்திதான் எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்றாகலாம். மாறாக, இந்த இணையதளத்தின் குறைவான கிராபிக்ஸ் வடிவத்திற்கு நீங்கள் மாறலாம்.

இந்த இணையதளத்தின் சில அம்சங்கள் உங்கள் இணைய உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் மென்பொருளை இயக்க நிலைக்கு கொண்டுவந்தாலோ அல்லது "எனேபில்" செய்தாலோதான் வேலைசெய்யும். பிரபல இணைய உலவிகளில் ஜாவாஸ்கிரிப்ட் மென்பொருளை இயக்க நிலைக்கு கொண்டுவருவது எப்படி என்பது தொடர்பில் ஆங்கிலத்தில் மேலதிக விவரங்கள் பெற இங்கே சொடுக்கவும்.

இணையத்தில் காணொளிகளைக் பார்ப்பதும் ஒலிக் கீற்றுகளைக் கேட்பதும் எப்படி?

பிபிசிதமிழ்.கொம்மின் காணொளி மற்றும் ஒலிக்கீற்றுக்கள், இணையதளத்தின் பல்வேறு பகுதிகளில் தனி இணைப்புகளாக இருக்கும், அல்லது ஒரு செய்திப் பக்கத்துக்கு உள்ளேயே இயங்ககூடிய ஒன்றாக இருக்கும்.

இந்த கீற்றுளை நீங்கள் பார்க்க/கேட்க விரும்பினால், உங்களுக்கு குறைந்தது 56 kbps (dial-up) வேகம் கொண்ட இணைய வசதி தேவை. அதிக வேகமான அகண்ட அலைக்கற்றை இணைய வசதி இருந்தால் கீற்றுகள் தடங்கல் இன்றி சிறப்பாக வரும். செய்திப் பக்கங்கள் உள்ளேயே இயங்கும் வகையான கீற்றுகளை இயக்குவதற்கு உங்களின் இணைய உலவியில் பிளாஷ் பிளேயர் பிளக் - இன் அவசியம்.

பிளாஷ் பிளேயரை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்*:

http://www.bbc.co.uk/webwise/categories/plug/flash/flash.shtml?intro2

மற்ற காணொளி மற்றும் ஒலிக் கோப்புகளை இயக்குவதற்கு உங்களுக்கு ரியல் பிளேயர் அல்லது விண்டோஸ் மீடியா பிளேயர் தேவை

ரியல் பிளேயரை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்*:

http://www.bbc.co.uk/webwise/categories/plug/real/newreal.shtml?intro2

விண்டோஸ் மீடிய பிளேயரை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்*:

http://www.bbc.co.uk/webwise/categories/plug/winmedia/newwinmedia.shtml?intro2

* பதிவிறக்க பொறுப்பேற்காமை விளக்கம்: எங்களின் bbc.co.uk இணையதளத்தில் இருக்கும் தகவல்களை பெறுவதற்கு தேவைப்படும் பிளக் இன்கள் அனைத்துமே இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்தக் கூடியவை. இதற்காக கடன் அட்டை எண் போன்ற எந்தவிதமான கட்டண விவரங்களும் நீங்கள் தரத்தேவையில்லை.

இந்த பிளக் இன்களை நீங்கள் பதிவிறக்கம் செய்யும்போது, அதை வழங்கும் வெளி நிறுவனத்துடன் சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று கோரப்படுவீர்கள். இதற்கும் பிபிசிக்கும் தொடர்பில்லை. உங்களின் தனிநபர் தகவல்களை அவர்கள் எப்படிக் கையாள்வார்கள் என்று அவர்களூம் உங்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

RSS செய்திச்சேவை முகவரிகள் என்றால் என்ன?

செய்தி ஒருங்கிணைப்பு: RSS + ATOM (முழுக் கட்டுரை) செய்திச்சேவை முகவரிகள்

RSS செய்திச்சேவை மூலம் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் புதியவற்றை நீங்கள் உடனுக்குடன் பார்க்க முடியும். மிகச் சமீபத்திய தலைப்புச் செய்திகள் மற்றும் காணொளிகளை அவை பிரசுரமாகும் அந்த இணையதளத்திற்கு செல்லாமலேயே அவை பிரசுரமாகும் அதேநேரத்திலும் ஒரே இடத்திலுமாக நீங்கள் பெறலாம்.

RSS என்ற சுருக்கத்தின் விரிவாக்கம் என்ன என்பது குறித்து சில விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் பெரும்பாலானவர்கள் 'Really Simple Syndication' என்பதன் சுருக்கமே இது என்கிறார்கள். அடிப்படையில் இவையும் இணையப் பக்கங்கள்தான், ஆனால் மனிதர்களால் எளிதாக படிக்க முடியாது, கணினிகள்தான் எளிதாக படிக்க முடியும் என்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

RSS சேவை குறித்தும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்:

புகைப்படங்கள், ஒலிக் கீற்றுகள் மற்றும் காணொளிகளை நான் உங்களுக்கு அனுப்புவது எப்படி?

உங்களின் புகைப்படம், ஒலி மற்றும் காணொளியை எங்களுக்கு அனுப்புவதற்கு, பயன்பாட்டாளர் உருவாக்கிய தகவல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு இங்கே சொடுக்கவும்.

கருத்தை தெரிவிக்கும் படிவம்

உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்வதற்கு கருத்து தெரிவிக்கும் படிவத்தை பயன்படுத்தவும்.

பிபிசிதமிழ் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது எப்படி?

ஜி.எம்.டி. என்றால் என்ன?

கிரீன்விச் மீன் டைம் (ஜி.எம்.டி.) என்பது, பூமிப்பந்தின் தீர்க்கரேகையின் பூஜ்ஜியக் கோட்டில் வைத்து கணக்கிடப்படும் நேரம்.

பிபிசி உலக சேவையின் நேரங்கள் பொதுவாக ஜி.எம்.டி. நேரக்கணக்கில் காட்டப்படும் (அதேசமயம் இணையதளத்தில் எங்களது நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு நேரங்கள் உள்ளூர் நேரப்படி என்ன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும்)