கைத்தொலைபேசி - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

காணொளி மற்றும் ஒலித் தரவுகளை கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்வது தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

AV என்றால் என்ன?

AV என்பது ஆடியோ விஷுவல் என்பதன் சுருக்கும். இங்கே இது காணொளி மற்றும் ஒலி வடிவங்களை குறிக்கிறது.

என்னுடைய கையடக்க கருவியில் காணொளி/ஒலியை பார்ப்பது அல்லது கேட்பது எப்படி?

எங்களின் காணொளிகளைப் பார்ப்பதற்கும் ஒலிக் கீற்றுகளைக் கேட்பதற்கும் உங்களிடம் பொருத்தமான கையடக்க கருவி இருக்கவேண்டும். GPRS மற்றும் WAP தொழில்நுட்பங்கள் ஊடாக தரவுகளைப் பெறுவதற்குரிய வசதி உங்களின் கைத்தொலைபேசி சிம் கார்டுக்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும்.

பிபிசிஉலகசேவை.கொம் இணையதளத்தில் என்னென்ன விதமான தரவுகள் உள்ளன?

எங்களின் கைபேசிக்கான இணையதளத்தில் நாங்கள் கீழ்கண்டவடிவங்களில் ஒளி/ஒலி வடிவங்கள் இருக்கின்றன.

  • 3gp
  • mp3

கணினிக்கான இணையதளத்தில் நாங்கள் கீழ்கண்ட வகைகளில் வழங்குகிறோம்:

  • ரியல்மீடியா
  • விண்டோஸ் மீடியா

எவ்வளவு செலவாகும்?

எமது காணொளி அல்லது ஒலி கோப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு பிபிசி கட்டணம் வசூலிப்பதில்லை. அதேசமயம், நீங்கள் பதிவிறக்கம் செய்யும் தரவின் அளவைப் பொறுத்து உங்களின் இணைய சேவையாளர் கட்டணம் வசூலிக்கலாம். பதிவிறக்கம் செய்வதற்குரிய கட்டணம் பற்றி உங்களுக்கு தெளிவில்லை என்றால், பதிவிறக்கம் செய்யும்முன் இணையசேவை வழங்குநரிடம் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

உங்களது இணைய சேவையின் தகவல் கடத்து வேகத்தை பொறுத்து இது அமையும். சராசரியாக ஒரு ஒலி/ஒளிக் கீற்றை பதிவிறக்கம் செய்ய 1 முதல் 2 நிமிடங்கள் பிடிக்கும்.

ஒலிக் கீற்றொன்றை நான் கேட்பது எப்படி?

நீங்கள் கேட்கவிரும்பும் கீற்றை தேர்ந்தெடுங்கள். அது பதிவிறங்கிய உடன் பெரும்பாலும் அது தானாகவே ஒலிக்கத் தொடங்கும். அப்படி அது தானாக ஒலிக்கத் துவங்காவிட்டால், அந்த கீற்றை நீங்கள் எங்கு சேமித்தீர்களோ அங்கு சென்று அந்த கீற்றை இயக்கத் துவங்குங்கள். நீங்கள் ஏராளமான குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை உங்கள் கையடக்க கருவியில் சேமித்துள்ளதன் காரணமாக ஒருவேளை அதன் சேமிப்புக் களன் நிறைந்திருந்தால், சில கோப்புகாளை நீங்கள் அழித்து புதிய கோப்பு சேருவதற்கு நீங்கள் இடம் ஏற்படுத்தித் தர நேரலாம்.

காணொளி ஒன்றை நான் பார்ப்பது எப்படி?

ஒலிக் கீற்றொன்றைக் கேட்பதற்கு மேலே சொன்ன அதே வழிமுறைகளை இதற்கும் கடைபிடிக்கவும்.

ஒலியின் தரத்தை மேம்படுத்துவது சாத்தியமா?

பொதுவாக, கைத்தொலைபேசிக்குள் இருக்கும் ஒலிபெருக்கிகளில் ஒலியின் தரம் குறைவாகவே இருக்கும். எனவே காதில் பொருத்தி கேட்கும் ஒலிபெருக்கிகளான ஹெட்போன்களை பயன்படுத்துவது நலம்.

பிபிசி உலகசேவை இணையதளத்தின் முகப்பு பக்கத்துக்கான இணைய முகவரியை எனக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப முடியுமா?

இல்லை. அது சாத்தியமில்லை

எனது கையடக்க கருவியின் வாயிலாக பிபிசி வானொலி நிகழ்ச்சி ஒன்றை அது ஒலிபரப்பாகும் அதே நேரத்தில் கேட்கமுடியுமா?

காணொளி / ஓலிக் கீற்றுகளை ஒலிபரப்பாகும் அதே நேரத்தில் கையடக்க கருவிகளில் பெறக்கூடிய வசதி தற்போதைக்கு இல்லை.

பிபிசி ஐபிளேயரை எனது கைபேசியில் பெறமுடியுமா?

எந்தெந்த கையடக்க கருவிகளில் பிபிசி ஐ பிளேயரை பெற முடியும், எந்தெந்த கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்தோ ஒளிபரப்பும் நேரத்திலோ நிகழ்ச்சிகளைக் காணமுடியும் என்பவை குறித்து அறிய, பின்வரும் இணைய பக்கத்திற்கு செல்க: http://iplayerhelp.external.bbc.co.uk/help/mobile/mobile_phone