கைத்தொலைபேசியில் ஒலி, ஒளி தரவுகளைப் பெறுவது தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கைத்தொலைபேசியில் ஒலி, ஒளி தரவுகளைப் பெறுதல் தொடர்பான கேள்விகள்

கைத்தொலைபேசியில் ஒலி, ஒளி தரவுகளை கேட்பதும் பார்ப்பதும் எப்படி?

பிபிசி இணையதளத்தில் உள்ள காணொளிகளைப் பார்க்கவும், ஒலிக் கீற்றுகளைக் கேட்கவும் அதற்குரிய வசதி படைத்த கைத்தொலைபேசி உங்களுக்குத் தேவை. மேலும் ஜி பி ஆர் எஸ் அல்லது எட்ஜ் தொழில்நுட்பம் வழியாக தரவுகளை கடத்துவதற்கு ஏற்ப உங்கள் சிம் கார்டு செயலூக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அது பற்றி கூடுதல் விவரம் அறிய உங்கள் கைத்தொலைபேசி சேவை நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.

பிபிசிதமிழ்.கொம் இணையதளத்தில் இருந்து எந்தெந்த வடிவங்களில் ஒலி ஒளி கோப்புகளை நான் தரவிறக்கம் செய்ய முடியும்?

கைத்தொலைபேசிகளுக்குரிய எமது இணையதளத்தில் நாங்கள் பின்வரும் கோப்பு வடிவங்களை வழங்குகிறோம்:

3gp, mp4 மற்றும் mp3

ஒலி/ஒளித் தரவுகளைப் பெறுவதற்கு என்ன செலவாகும்?

காணொளிகளைப் பார்ப்பதற்கோ ஒலிக் கீற்றுகளைக் கேட்பதற்கோ பிபிசி உங்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால், நீங்கள் பயன்படுத்தும் தரவின் அளவுக்கு ஏற்ப இணைய சேவை வழங்கும் நிறுவனம் உங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும். உங்கள் கைத்தொலைபேசி இணைப்பில் தரவுக்கு என்ன விலை என்று தெரியாது என்றால் சேவை வழங்கும் நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.

பிபிசி வழங்கும் ஒளி/ஒலி தரவுகளை நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் கேட்டதற்காகவும் பார்த்ததற்காகவும், நீங்கள் செலுத்த வேண்டிவரும் தரவு பயன்பாட்டுக் கட்டணத்துக்கு பிபிசி எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

ஒலி/ஒளி பயன்பாட்டு தரவுக் கட்டணங்களை கட்டுக்குள் வைத்திருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

காணொளிகளை தரவிறக்கம் செய்வதால் ஆகின்ற செலவைக் கட்டுக்குள் வைக்க சில வழிகள் உண்டு:

- கணினி வழியாக பாருங்கள். கைத்தொலைபேசி வழியாக பார்க்கக்கூடிய காணொளி மற்றும் ஒலிக் கீற்றுகள் கணினி வழியாக பெறக்கூடிய எமது டெஸ்க்டாப் வடிவ இணையதளத்திலும் உண்டு.

- தரவு பொட்டலம் (டேட்டா பண்டில்) ஒன்றை பெற்றுக்கொள்ளவும். தரவுப் பயன்பாட்டுக்கென மாதத்துக்கு ஒரு முறை என்றோ, ஒரு நாளைக்கு ஒரு முறை என்றோ குறிப்பிட்ட ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்திவிடுவது அல்லது மாத உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தரவுப் பொட்டலம் ஒன்றை வாங்கிக்கொள்வது போன்றவற்றை நீங்கள் செய்யலாம். கைத்தொலைபேசியில் அதிகமாக இணையத்தை பயன்படுத்தக்கூடியவர் நீங்கள் என்றால் இவ்வகையில் செய்துகொள்வது நல்லது. அதற்கு சேவை நிறுவனத்தை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறவும்.

- wi-fi மூலம் இணையத்தை பயன்படுத்துவது. இப்போது பல கைத்தொலைபேசிகள் wi-fi வசதியுடன் வருகின்றன. வீட்டிலோ, ஹாட்ஸ்பாட் மையங்களிலோ wi-fi மூலமாக பிராட்பேண்ட் கனெக்ஷனோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால், கைத்தொலைபேசி தரவுக் கட்டணத்தை பெறுமளவில் குறைக்கலாம். உங்கள் கைத்தொலைபேசியில் wi-fi வசதி இருக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால், கைத்தொலைபேசி தயாரிப்பாளரையோ, கைத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தையோ தொடர்புகொள்ளவும்.

- புளுடூத் பயன்படுத்தவும். பிபிசி கைத்தொலைபேசி வடிவ இணையதளத்தில் உள்ள காணொளிக் கீற்றுக்களில் சில மற்றவர்கள் விநியோகிக்கும் வகையில் திறந்துவிடப்பட்டுள்ளன. எனவே ஒருவர் தரவிறக்கம் செய்தால் அதனை அவர் புளுடூத் வழியாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

தரவிறக்கம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

உங்களுடைய தரவு பயன்பாட்டு சேவையின் வேகத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும். 3ஜி இணைப்பு வைத்திருப்போர் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் ஒரு சிறிய கீற்றை தரவிறக்கம் செய்ய முடியும். wi-fi வழியாக என்றால் அதற்கும் குறைவான நேரமே ஆகும்.

நீளமான கீற்றுகளை தரவிறக்கம் செய்ய அதிக நேரம் ஆகும்.

ஒலியின் தரத்தை என்னால் மேம்படுத்திக்கொள்ள முடியுமா?

சில கைத்தொலைபேசிகளில் அதிலேயே உள்ள ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தி கேட்கும்போது ஒலியின் தரம் குறைவாக இருப்பதுபோலத் தெரியும். அப்படியிருந்தால் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கவும்.

பிபிசிதமிழ்.கொம் இணையதளத்தில் வானொலி நிகழ்ச்சிகளை நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நேரத்திலேயே நேரடியாக எனது கைத்தொலைபேசியில் லைவ் ஸ்டிரீம் கிளிப்பாக கேட்க முடியுமா?

தற்போது லைவ் ஸ்டிரீமாக வானொலி நிகழ்ச்சிகளை நேரடியாக பிபிசிதமிழ்.கொம் இணையதளத்தில் நாங்கள் வழங்கவில்லை.