அமெரிக்காவில் உள்ள அரசியல் பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலனின் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலனின் பேட்டி

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வென்றுள்ளது பற்றி , அமெரிக்காவில் உள்ள அரசியல் பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஹிலரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபராகியுள்ள டொனால்ட் டிரம்ப், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளார் என்றார்.

மரபு ரீதியாக ஜனநாயக கட்சியின் பலமான இடங்களாக கருதப்பட்ட விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வென்றுள்ளார். இது வெள்ளை இன பெண்கள் பலரும் ஹிலரிக்கு வாக்களிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.

அவர் மேலும் டிரம்ப் தேர்வாகியுள்ளது எந்த வகையில் தெற்காசிய நாடுகளில் எதிரொலிக்கும் என்றும் இந்த பேட்டியில் விவரித்துள்ளார்.