கிறிஸ்துமஸ் சந்தைக்கு செல்ல மக்கள் அச்சம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிறிஸ்துமஸ் சந்தைக்கு செல்ல மக்கள் அச்சம்

பெர்லின் நகரத்தில் மக்கள் கூட்டம் மிகுந்த கிறிஸ்துமஸ் சந்தை பகுதிக்குள் ஒரு தனி நபர் லாரியை ஓட்டிச் சென்றதால், 12 பேர் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் பெர்லின் நகரத்தில் நடந்த அந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ஃபிராங்கஃபர்ட் தமிழ் சங்க தலைவர் ஞானசேகரனிடம் பேசிய போது அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அவர், ''பெர்லினில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் குறிப்பாக தமிழகர்கள் வசிக்கும் பகுதி. கிறிஸ்துமஸ் சந்தைக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வருவார்கள். அலுவலகங்களில் இந்தச் சந்தைக்கு செல்லுவதற்குத் தனி நேரம் கொடுப்பார்கள். மிகவும் கூட்ட நெரிசலாக இருந்தாலும், பலரும் இந்தச் சந்தையை விரும்புவார்கள். தற்போது மக்கள் பயத்துடன் உள்ளனர்,'' என்றார்.

பெர்லின் தெருக்களில் அதிக எண்ணிக்கையில் போலிசார் குவிந்துள்ளனர் என்ற ஞானசேகரன்,''அரசு இது போன்ற சம்பவம் இனி நடக்காது என்று பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக உறுதி அளித்துள்ளது. ஆனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் யோசிக்கும் நிலை தான் உள்ளது,'' என்றார்.