அதிமுக உறுப்பினர் போல் பேசும் ராம மோகன ராவ் : குருமூர்த்தி பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதிமுக உறுப்பினர் போல் பேசும் ராம மோகன ராவ் : குருமூர்த்தி பேட்டி

தமிழகத்தின் தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவின் வீடு மற்றும் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவரின் பேச்சு ஒரு அதிமுக உறுப்பினரின் பேச்சு போன்றது என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராமமோகன ராவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் அவர் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனப் பேசியது குறித்து பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்த குருமூர்த்தி, ''ஓர் அதிமுக உறுப்பினர் பேசுவது போன்றே அவரது பேச்சு இருந்தது. அவரது உயிருக்கு யாரால் ஆபத்து என்பதைக் குறிப்பிடவில்லை. அம்மாவால் வளர்க்கப்பட்டவன் என்று அவர் குறிப்பிடுவது ஓர் அரசாங்க அதிகாரிக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத ஒரு செய்கை,,'' என்றார்.