BBC tamil

முகப்பு > விளையாட்டு

முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஆஸி அணி

8 மார்ச், 2012 - 12:46 ஜிஎம்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அடிலைட் நகரில் இடம்பெற்ற மூன்றாவது இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆஸி அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பங்குகொண்ட முத்தரப்பு போட்டிகளின் இறுதிப்போட்டிகளில் விளையாட இலங்கையும் ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றிருந்தன.

மூன்று போட்டிகள் கொண்ட இறுதிப் போட்டியில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றன.

வியாழக்கிழமை(8.3.08) அடிலைட்டில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி இறுதிப் போட்டியில் டாசில் வென்ற இலங்கை அணி ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தது.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னரும் வேடும் அணிக்கு வலுவான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தாலும் மற்ற ஆட்டக்காரர்களால் அதை பயன்படுத்திக் கொண்டு ரன்களை குவிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணி 49.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. வேட் அதிக பட்சமாக 49 ரன்களை அடித்தார். மஹ்ரூபும், ஹேரத்தும் தலா 3 விக்கெட்டுக்களை வீழத்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி தனது ஆட்டத்தை தடுமாற்றத்துடன் துவக்கியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில். உபுல் தரங்க மட்டும் நிதானமாக ஆடி 71 ரன்களை எடுத்தார். மற்ற வீர்ர்கள் சோபிக்காத்தால் இலங்கை அணி 48.5 ஒவர்களில் 215 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

ஆஸ்திரேலியாவின் மேக்கே 28 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழத்தினார்.

இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது அணியான இந்தியா ஆரம்பம் முதலே தோல்விகளை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter