ஜெனீவாவில் அரசு உண்மையை கூறவில்லை என்கிறார் சம்பந்தர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 மார்ச், 2012 - 18:12 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசு உண்மைகளை முழுமையாக் கூறவில்லை என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஜெனீவாவில் ஐ நா வின் மனித உரிமைகள் குழுவின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இலங்கை அரசு அந்தக் கூட்டத்தில் போருக்கு பின்னரான காலத்தில், ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்து போதிய காலம் தேவை என்றும், தற்போது அரசுக்கு எதிராக ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இணக்கப்பாட்டை பாதிக்கும் என்று கூறுகிறது.

ஆனால் அமெரிக்க அரசோ நல்லிணக்க ஆணைக்குழு போதிய அளவில் சுயாதீனமாக செயல்படவில்லை என்றும், அதன் பரிந்துரைகள் போதுமானதாக இல்லை என்றும் கூறி போரின் இறுதிகட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழுமையான ஒரு சுயாதீனமான விசாரணை தேவை எனக் கோரும் நோக்கிலும், அரசின் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக வகையில் விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டில் அரசுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் அதே வேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசு ஜெனீவா கூட்டதில் தெரிவித்த கருத்துக்களுடன் தங்களுக்கு கடுமையான முரண்பாடுகள் உள்ளன என்றும் அரசு தெரிவித்தவை முழுமையாக உண்மையானவை அல்ல என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பில் ஐ நாவின் மனித உரிமைகள் குழுவுக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அக்கடிதம் ஏன் என்பது பற்றி தமிழோசையிடம் சம்பந்தர் தெர்வித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.