'உண்மை கண்டறியும் ஆணைக்குழு தேவை': மு.காங்கிரஸ்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 மே, 2012 - 16:55 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மேலதிகமாக, உண்மை கண்டறியும் ஆணைக்குழுவும் தேவை:முஸ்லிம் காங்கிரஸ்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானம் கோரியிருந்த பின்னணியில், குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரியிருந்தார்.

இது தொடர்பில் சில கட்சிகள் அரசாங்கத்திடம் தமது நிலைப்பாடுகளை முன்வைத்திருக்கின்றன.

இந்த நிலையில், இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று மூன்றாவது போர் வெற்றிவிழா மேடையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளில் 'நடைமுறைக்குச் சாத்தியமான பரிந்துரைகளே அமல்படுத்தப்படுவதாகவும்' மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக உண்மை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான குழுவொன்றையும் அமைக்க வேண்டும் என்று இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரதான எதிரணிகளின் வரிசையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.