ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குடியரசுத் தலைவர் தேர்தல்: பா.ஜ. கூட்டணிக்குள் குழப்பமா?

இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருக்கும் சிவசேனைக் கட்சி ஆதரிக்க முடிவெடுத்துள்ளது.

மேலும், அக்கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் இத்தேர்தலில் போட்டியை உருவாக்காமல் கருத்தொற்றுமை அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் இரண்டு முக்கிய கட்சிகள் இவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அக்கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது என்பதைக் காட்டுக்கிறதா என்று பாரதீய ஜனதாக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாரமனிடம் தமிழோசை வினவியது.